Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மீன் வளர்ப்பில் ஆர்வம் உண்டா ? இதோ உங்களுக்கான செய்தி !!

தருமபுரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) - 2021- 22 ன் கீழ் மீன்வளர்ப்பு செய்திடும் விவசாயிகள் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  1. புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.2,80,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமாக ரூ.4,20,000/- வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்கான இலக்கு 1.5 ஹெக்டேர் (GC -1 ஹெக்டேர் மற்றும் SC & ST 0.5 ஹெக்டேர்).
  2. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.2,80,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,20,000/- இலக்கு 3.5 ஹெக்டேர் ஹெக்டேர் மற்றும் SC & ST  மானியமாக வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்கான (GC - 1 Glam&GLI, WOMEN - 2 0.5 ஹெக்டேர்) உள்ளது.  
  3. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் ஆகும் செலவின தொகை ரூ.7,50,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,50,000/- மானியமாக வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்கான இலக்கு 3 அலகுகள். (GC - 2 அலகுகள் மற்றும் SC & ST -1 அலகு) 
  4. கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் 30 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் குறைந்தபட்சம் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 எண்ணம் அலங்கார மீன்வளர்ப்பு தொட்டிகள் மற்றும் அதற்கான இடுபொருட்கள் கொண்ட ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.1,20,000/- மற்றும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/பெண்கள் பயனாளிகளுக்கு (SC/ST/Women) (SC) 60% மானியமாக ரூ:1,80,000/- வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 2 அலகு ஆகும். (GC - 2 அலகுகள்)
  5. நடுத்தர அலகு அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் 150 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் குறைந்தபட்சம் 2400 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 எண்ணம் அலங்கார மீன்வளர்ப்பு தொட்டிகள் மற்றும் அதற்கான இடுபொருட்கள் கொண்ட ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,20,000/- மற்றும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/பெண்கள் பயனாளிகளுக்கு (SC/ST/Women) (SC) 60% மானியம் ரூ.4,80,000/- வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 2 அலகு ஆகும். (Gc -1 அலகு மற்றும் SC & ST - 1 அலகு)
  6. தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் வாணியாறு உபவடிநிலப்பகுதியில் மடித்து எடுக்கக்கூடிய தொட்டிகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளுதல் திட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்திற்கு 05 அலகுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
ஒரு அலகிற்கு ரூ.2.50 இலட்சம் மானியமாக வழங்கப்பட மேற்கண்ட திட்டங்களுக்கு இம்மாவட்டத்தில் உள்ள மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன் 22.08.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், 1/165 ஏ, இராமசாமிகவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி 636705 என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அலுவலக தொலைபேசி எண்: 04342-296623, 9384824260

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884