தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படியும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டலின் படியும் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இக்குறுவள மையத்துக்குட்பட்ட இல்லம் தேடி கல்வி தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி 22..08.2022 மற்றும் 23.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இப்பயிற்சியினை அக்குறுவள மைய தலைமை ஆசிரியை கல்விக்கரசி அவர்களும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா அவர்களும் தொடங்கி நடத்தினர்.
கருத்தாளர்களாக உமாமகேஸ்வரி, உமா ஆகிய இரண்டு ஆசிரியர்களும் செயல்பட்டு அவர்களின் பணிகள்,வகுப்பில் செயல்பாடுகளைச் செயல் படுத்தும் முறை ஆகியவற்றை கலந்துரையாடல், விளையாட்டு ஆகியவற்றின் மூலம் விளக்கினர்.



