Type Here to Get Search Results !

"எனக்கென்று ஒரு மரக்கன்று", "மனிதர்களை மட்டும் அல்ல மரங்களையும் நேசிப்போம்..." திட்ட தொடக்க நிகழ்வு.

"எனக்கென்று ஒரு மரக்கன்று", "மனிதர்களை மட்டும் அல்ல மரங்களையும் நேசிப்போம்..." என்ற கருத்தை மையமாக கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கினை முன்னெடுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருவதை முன்னிட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின், சேலம் திட்ட அமலாக்க அலகின் சார்பில் இன்று முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 500 பனை விதைகள் விதைக்கும் பணிகள் மற்றும் 200 மரக்கன்றுகள்  நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று மரக்கன்றுகளை நட்டு வைத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின், சேலம் திட்ட அமலாக்க அலகின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின், சேலம் திட்ட அமலாக்க அலகின் சார்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி இன்று (05.08.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.

எனக்கென்று ஒரு மரக்கன்று", "மனிதர்களை மட்டும் அல்ல மரங்களையும் நேசிப்போம்..." என்ற கருத்தை மையமாக கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கினை முன்னெடுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகின்றன. 

இதனை முன்னிட்டு, இன்று முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின், சேலம் திட்ட அமலாக்க அலகின் சார்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 500 பனை விதைகள் விதைக்கும் பணிகள் மற்றும் 200 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அழகிய மலர்கள் பூக்கின்ற மரங்களை இயற்கையோடு ஒன்றிய மரங்களை நட்டு, பராமரித்தல் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு இனிமையான பயணமாக அவர்கள் பயணம் தொடரும். எனவே இத்தகைய மரக்கன்றுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நட்டு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின், சேலம் திட்ட அமலாக்க அலுவலக திட்ட இயக்குநர் திரு.டி.குலோத்துங்கன், இன்ட்இன்ப்ராவிட் திட்ட மேலாளர் திரு.கே.சிவக்குமார், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. மு.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies