தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்வது வழக்கம்.
இன்று பாலக்கோடு மந்தைவெளியில் உள்ள ராஜகணபதி கோவில் முன்பு 11 அடி உயரம் கொண்ட ராஜவிநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிலைக்கு பூ, ஆப்பிள், ஆரஞ்சு, எழுமிச்சை, வெள்ளை எருக்கன்பூ, அருகம்புல், மாலை உள்ளிட்டவைகளால் அணிவித்து அலங்கரிக்கப்பட்டு யாகம் வளர்த்து பூஜை செய்து சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
- தகடூர் குரல் செய்திகளுக்காக பாலக்கோடு செய்தியாளர் வேலு.
