தருமபுரி மாவட்டம் அரூர் உரக்கடைகளில் பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் திரு மோகன் தலைமையிலான வேளாண் அலுவலர்கள் ஒவ்வொரு உரக்கடைகளிலும் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
உரக் கடைகளில் உரங்களின் தரம், உரிய அளவீடு, பில் செய்து முறையாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறுகையில், அரூரில் 35 க்கும் மேற்பட்ட உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அரசு விதிமுறையை பின்பற்றாமல் உரக் கடை கள் செயல்படுவது மற்றும் மானியத்தில் வழங்கும் உரங்கள் விவசாய உபயோகத்திற்கு வழங்காமல் வேறு தொழிற்சாலை, பிற தொழில் உபயோகத்திற்கு வழங்கப்படுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்றனர்.
ஆய்வின் போது அருர் உதவி வேளாண்மை இயக்குநர் (பொ) திரு குமார், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை அலுவலர் திருமதி ஜிவகலா மற்றும் வேளாண்மை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் திரு அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.


.jpeg)