நிகழ்ச்சியில் உதவிதுணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா, மொரப்பூர் காவல் ஆய்வாளர் வசந்தா, சைபர்கிரைம் காவல் அலுவலக உதவி ஆய்வாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
கொங்குகலைமற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் தாளாளர் வரதராஜன்,பொருளாளர் சாமிக்கண்ணு, செயலாளர் பிரபாகரன், முதல்வர் முனைவர் குணசேகரன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சொக்கலிங்கம், எம் தொட்டம்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார். 200க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், நேரு யுவ கேந்திராவின் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

