Type Here to Get Search Results !

பெண் உள்ளாட்சி தலைவிகளுடன் 75 நிமிடம்" சந்தித்து பேசுவோம்! சாதிக்கப் போவதை பேசுவோம்! - சிறப்பு கருத்தரங்கம்.

அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கும். வாழ்க்கை தர மேம்பாட்டிற்கும், வாழ்வாதார உயர்விற்கும் அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் அனைவரும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். 

பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "பெண் உள்ளாட்சி தலைவிகளுடன் 75 நிமிடம்" சந்தித்து பேசுவோம்! சாதிக்கப் போவதை பேசுவோம்! என்ற தருமபுரி மாவட்ட பெண் உள்ளாட்சி தலைவிகளுடனான கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் பேச்சு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "பெண் உள்ளாட்சி தலைவிகளுடன் 75 நிமிடம்" சந்தித்து பேசுவோம்! சாதிக்கப் போவதை பேசுவோம்! என்ற தருமபுரி மாவட்ட பெண் உள்ளாட்சி தலைவிகளுடனான கருத்தரங்கம் இன்று (12.08.2022) நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப அவர்கள் தலைமையேற்று உள்ளாட்சியின் வளர்ச்சியில் பெண் தலைவிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்க தலைமை உரை ஆற்றினார்.

மேலும், இக்கருத்தரங்கில் பெண் சமத்துவம் - சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை என்ற தலைப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சு.அனிதா அவர்களும். உள்ளாட்சி - திட்டங்களும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அமாலா அவர்களும், சமூக நலனில் உள்ளாட்சிகளின் செயல்பாடு என்ற தலைப்பில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ஜான்சிராணி அவர்களும், பெண்களின் நலன் கிராமங்கள் தோறும் என்ற தலைப்பில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு சவுண்டம்மாள் அவர்களும், பெண் கல்வி ஊராட்சியில் இருந்து பல்கலைக்கழகம் வரை என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் திருமதி.எம்.மஞ்சுளா அவர்களும். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்டங்கள் - கிராமங்கள் தோறும் என்ற தலைப்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவவர் திருமதி.செண்பகவள்ளி அவர்களும், பெண்கள் மீதான வன்முறை ஊராட்சிதோறும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.ஆர்.சிந்து அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.

இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தலைமையேற்று. பேசும்போது தெரிவத்ததாவது: உள்ளாட்சிகளில் சிறப்பாக பணியாற்றிடும் வாய்ப்பு பெற்றுள்ள பெண் உள்ளாட்சி தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் தலைவிகளிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது. பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மத்தியிலும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் தைரியமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். 

மக்களுக்கான வாழ்வாதார மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யக் கூடிய புதிய திட்டப்பணிகளை ஊராட்சிகளின் தீர்மானங்களின் மூலம் நிறைவேற்றும் உரிமை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உள்ளது. 

இந்த தீர்மானங்களுக்கு நிர்வாக அனுமதி மட்டும்தான் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு தீர்மானத்திலும் மக்களுக்கான நல்ல திட்டங்கள் இருக்க வேண்டும். அத்தகைய திட்டங்களை கொண்டு வருவதில் பெண் உள்ளாட்சி தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு துறைகளிலிருந்தும் களப்பணியாளர்கள் ஊராட்சிகளுக்கு வருகைபுரிகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் ஊராட்சியில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதையும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட காலத்தில் குளோரின் பவுடர் பயன்படுத்தி சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும். மேலும், தங்கள் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் அடிக்கடி சென்று பேசுவதையும் ஊராட்சி மன்ற தலைவிகள் அன்றாட நிகழ்வாக அமைத்துக்கொள்ள வேண்டும். அங்கு பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற சத்துணவை ஆய்வு செய்ய வேண்டும். உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். உணவு தரமானதாகவழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

முருங்கைக்கீரை, இன்றைய காலக்கட்டத்தில் பெண்களிடையே இரத்தசோகை பிரச்சனை அதிகமாக இருப்பதால் தங்கள் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரமும், பப்பாளி மரமும் வளர்க்கப்பட்டு அதன் பயன்பாடு அப்பகுதியில் உள்ள தாய்மார்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு தயாரிக்கும் கலவை சாதத்தில் கருவேப்பிலை அதிக அளவில் சேர்க்க வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி மன்றத் தலைவிகளும், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளும் தங்களின் பதவியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

தங்களின் நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களிடம் விவாதிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தனி கவனம் செலுத்தி அவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் குழந்தைகள் அனைவரும் உயர்க்கல்வி பெறுவதை உறுதி செய்திடும் வகையில் உங்களது பணி சிறப்பாக அமைந்திட வேண்டும். 

குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கும், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உங்களின் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "பெண் உள்ளாட்சி தலைவிகளுடன் 75 நிமிடம்" சந்தித்து பேசுவோம்! சாதிக்கப் போவதை பேசுவோம்!! என்ற தருமபுரி மாவட்ட பெண் உள்ளாட்சி தலைவிகளுடனான கருத்தரங்கில் துறை சார்ந்த அலுவலர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார்கள். 

அரசின் திட்டங்களை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டால் தான் அனைத்து மக்களுக்குமான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அவ்வாறு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 13.08.2022 முதல் சுதந்திர தினமான 15.08.2022 வரை தருமபுரி மாவட்டத்தில் இல்லங்கள் தோறும் தேசியக்கொடியினை பறக்க விடுவோம். அதற்காக அனைத்து பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி, தேசிய கொடியினை அவரவர் இல்லங்களில் உயரத்தில் பறக்க விடவேண்டும் என தெரிவிக்க வேண்டும்.

எனவே, அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கும், வாழ்க்கை தர மேம்பாட்டிற்கும், வாழ்வாதார உயர்விற்கும் அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகள் அனைவரும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவத்தார். 

இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளின் அனைத்து இல்லங்களிலும் வருகின்ற 13.08.2022 முதல் சுதந்திர தினமான 15.08.2022 வரை தேசியக்கொடியினை ஏற்றுவோம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தேசியக்கொடியினை வழங்கினார்கள்.

அனைவரும் இந்திய திருநாட்டின் தேசத் தலைவர்களை நினைவுகூரும் வகையில் நமது தேசியக்கொடியை உயர்த்தி பிடித்து சுதந்திர திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். மேலும், இக்கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ஜான்சிராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சவுண்டம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சிந்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் திருமதி.எம்.மஞ்சுளா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.ம.யசோதா, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.லட்சுமி உட்பட தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884