இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்தியவர் கைது, 298 மது பாட்டில்கள், ஸ்கூட்டி பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்தியவர் கைது, 298 மது பாட்டில்கள், ஸ்கூட்டி பறிமுதல்.

பென்னாகரத்தில் ஸ்கூட்டியில் மது பாட்டில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்கப்படுவதாக  பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் குமார், பாபு, முருகன், சரவணன் ஆகிய போலீசார் தனிப்படை அமைத்து  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி மாங்கரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த கூடிய நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் மது பாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மது பாட்டில் கடத்தியவர் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஸ்ரீதர் வயது 30 என தெரிய வந்தது. 

மேலும் இவர் அதியமான் கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பென்னாகரத்தில் விற்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மதுபாட்டில் கடத்தி வந்த ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 298 மது பாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டி பறிமுதல் செய்தனர். இச் சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.