2டன் ரேஷன் அரிசி கடத்தல்; 3பேர் கைது மற்றும் வாகனம் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

2டன் ரேஷன் அரிசி கடத்தல்; 3பேர் கைது மற்றும் வாகனம் பறிமுதல்.

தர்மபுரி அருகே உள்ள சோகத்தூர் பகுதியில் வாகன சோதனையில் தர்மபுரி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.

பெங்களூர் நோக்கி சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

வண்டியை ஓட்டிவந்த டிரைவர் பென்னாகரத்தை சேர்ந்த வேலு(40), என்பதும், அவருடன் அதேபகுதியை சேர்ந்த மணி (31) என்பவரும் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் வேலு, மணி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதேபகுதியை சேர்ந்த அங்கமுத்து (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில்  இந்தாண்டில் இதுவரை போலீசார் நடத்திய சோதனையில் 79 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக லாரி, வேன், ஆட்டோ என மொத்தம் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தருமபுரியில் மெகா கல்யாண கண்காட்சி 2024, பந்தல் முதல் பந்தி வரை ஒரே இடத்தில், வரும் மார்ச் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், நமது தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. உங்களின் திருமணத்தை மேலும் சிறப்பாக்க வருகைதாருங்கள்..