மருதம் நெல்லி குழுமம், CKM நிறுவனம், மாருதி இரத்த வங்கி, சேலம் ஸ்ரீ முருகப்பா எலக்ட்ரிக்கல்ஸ், மை தருமபுரி பெருமையுடன் இணைந்து வழங்கிய தகடூர் அமுதப் பெருவிழா 2022 விழாவில் குருதி கொடையாளர்கள், மனித நேயர்கள், தன்னார்வலர்கள் என ஒவ்வொன்றிலும் 75 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தருமபுரியில் தன்னலமற்ற சேவை செய்து வரும் ஐந்து நபர்களுக்கு தகடூர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், குருதி கொடையாளர் விருதில் 36 ஆண்களும்,39 பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சிறந்த தன்னார்வலர்கள் பத்து நபர்களுக்கு தகடூர் தன்னம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜீஸஸ் கிரைஸ்ட் கல்வி நிறுவனம், PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், செந்தில் குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், சீனிவாசா பௌல்ட்ரி, யாழி என்டர்பிரைஸஸ், SSS ஜீவல்லரி, சின்னதம்பி பிராய்லர்ஸ், PCN தொலைக்காட்சி ஆகியோர் உடன் செயல்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாக மணிகண்டன் சினி டெக்கரேஷன்ஸ், ஹரிணி என்டர்பிரைஸஸ், அருணாச்சலா கேட்டரிங் சர்வீஸ், மித்ரா மீடியாஸ், மருதம் நெல்லி தொலைக்காட்சி மற்றும் பாப்புலர் தமிழ் யூடியூப் சேனல் ஆகியோர் இருந்தனர். சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்வில் நம் தகடூர் மண்ணில் கொண்டாடப்பட்டது.


