இதில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு கிழக்கு, மேற்கு,மத்தி என 3 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நல்லம் பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் மூத்த முன்னோடியாகவும், தி.மு.க.வின் ஆரம்ப நிலையில் இருந்து அடிமட்ட தீவிர தொண்டனாக மக்கள் பணியாற்றிய ஏ. எஸ். சண்முகம், மீண்டும் ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கொரோனா காலகட்டத்திலும் மக்கள் பணியே மகத்தான பணி என்று சிறப்பாக செயல்பட்டு தலைமைக் கழகத்தின் நன்மதிப்பை பெற்றதால் சண்முகம் மறுபடியும் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளராக தி.மு.க. தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்களும், பொதுமக்களும், ஒன்று திரண்டு ஏ.எஸ். சண்முகத்திற்கு மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. எஸ். சண்முகம், தி.மு.க. பொறுப்பாளர்களுடன் அதியமான் கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.