தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி மாரியம்மன் கோயில் அலுவலக வளாகத்தில் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வனத்தை விட்டு வெளியே வரும் யானை காட்டுப்பன்றி முயல் மான் மயில் உள்ளிட்டவைகள் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் உடனடியாக வனத்துறை வழங்கும் என தெரிவித்தனர்.
மேலும் வட்ட வணஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தாசம்பட்டி பவளந்தூர் A. கோடுபட்டி B.கோடுபட்டி சக்கல்நத்தம் ஜெல்மாரம்பட்டி அட்டப்பள்ளம் உப்பலாபுரம் மருக்காரம் பட்டி காந்திநகர் எலும்மல்மந்தை நாவணம்பட்டி கொடிக்கம்பம் குழிப்பட்டி தும்பல்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் அவர்களாக முன்வந்து ஒரு பொது இடத்திலோ அல்லது வனத்துறையிலே அல்லது காவல் துறையிலோ ஒப்படைக்கும்படி வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனத்தையோ வனத்தில் இருக்கும் உயிரினங்களையும் பாதுகாப்பது நமது கடமையாகும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் வனசரக அலுவலர் நடராஜன் வனகாப்பளார் அருண்குமார் வனவர் முனுசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
.gif)

