சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் குறித்து தருமபுரி மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு வணிகம் செய்யும் மகளிர் உள்ளிட்ட ஏராளமான மகளிர் பங்கேற்ற "நம்ம செஸ் நம்ம பெருமை" மாபெரும் சதுரங்க போட்டி இன்று (16.07.2022) நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிகி.சாந்தி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, தானும் சதுரங்கம் விளையாடினார்கள்.
இச்சதுரங்கப்போட்டியில் 100-ற்க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு வணிகம் செய்யும் மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று சதுரங்கம் விளையாடினர். முன்னதாக இச்சதுரங்கப்போட்டியில் பங்கேற்ற இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு வணிகம் செய்யும் மகளிர்களுக்கு சதுரங்கப்போட்டி எவ்வாறு விளையாட வேண்டும், இதற்கான விதிமுறைகள் என்ன போன்றவை குறித்து சதுரங்கப்போட்டி பயிற்சியாளர்கள் மூலம் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜெ.முத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான மகளிர் பங்கேற்றனர்.
.gif)

