திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/- மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/-வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்க்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை /முதுகலை தொழிற்கல்வி 1 தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்டசமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த பாரசீக மற்றும் ஜெயின்) ஆகிய சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கு டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம் மற்றும் சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தருமபரி மாவட்டத்தில் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- 20.07.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு பொம்மிடி உள்வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பொம்மிடியில் நடைபெறும்
- 27.07.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நல்லம்பள்ளி வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நல்லம்பள்ளி கிளை, சேலம் மெயின் ரோடு, நல்லம்பள்ளியில் நடைபெறும்.
- 03.08.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு பென்னாகரம் வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பென்னாகரம் கிளை, பேருந்து நிலையம் அருகில் பென்னாகரத்தில் நடைபெறும்.
- 08.08.2022 - திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு பாலக்கோடு வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பாலக்கோடு நகரக் கிளை சரவணா தியேட்டா’ அருகில் பாலக்கோட்டில் நடைபெறும் .
- 11.08.2022 - வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு காரிமங்கலம் வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, காரிமங்கலம் கிளை, பாலக்கோடு ரோடு காரிமங்கலத்தில் நடைபெறும் .
- 17.08.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பாப்பிரெட்டிப்பட்டி கிளை, ரங்கம்மா பேட்டை பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெறும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை , ஓட்டுநா உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும் ) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தருமபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)