Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 349 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலர்களிடம் வழங்கி, அம்மனுக்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (18.07.2022) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 349 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை மாவட்ட பெற்றுகொண்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடந்த வாரம் (11.07.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களிடம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் பங்களா வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான திரு.நா.நவாஷ் என்பவர் தான் தையல் தொழில் செய்து வருவதாகவும், தனக்கு ஒரு இலவச தையல் இயந்திரம் வேண்டுமென்று மனு அளித்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களிடம் அம்மனுவினை வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் திரு.நா.நவாஷ் அவர்களுக்கு ரூ.5,500/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தினை இன்று வழங்கினார்கள்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, திட்ட இயக்குநர் (பொ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஐயப்பன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies