தர்மபுரி மாவட்டம் அரூர் நீதி மன்றத்திற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கடந்த மே மாதம் முதல் நியமிக்கப்படாததால் ஒரு நாளைக்கு 30 முதல் 60 வரை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தற்காலிக நீதிபதி மூலம் ஒரு நாளைக்கு 100 வழக்குகள் வரை விசாரிக்கப்படுவதால் தேவையற்ற பணிச்சுமையும், கால விரயமும் ஏற்படுவதால் அரூர் நீதி மன்றத்திற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி அவர்களை உடனடியாக நியமனம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் திரு. G. M. அரூர் ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (07/07/2022) மனு அனுப்பி உள்ளார்.