பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புக்கான சிலிண்டர் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டியில் உள்ள கிராம மக்கள் இலவச கேஸ் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில் இணைப்புகள் வழங்க அறிவிப்பு வழங்கப்பட்டதை அடுத்து பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பிரவீன் அரூர் நகர பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னாள் இளைஞர்கள் அணி தலைவர் சாலமன் ராஜா ஒன்றிய ஓ பி சி அணி தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.