Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா- 2022 வருகின்ற 02. 08.2022 முதல் 04.08.2022 வரை - மாவட்ட ஆட்சித்தலைவர்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம். ஒகேனக்கலில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா- 2022 வருகின்ற 02. 08.2022 முதல் 04.08.2022 வரை மூன்று நாட்கள் சிறப்பாக தடைபெற உள்ளதை முன்னிட்டு, இவ்விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம். ஒகேனக்கலில் சுற்றுலா துறையின் சார்பில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா-2022 வருகின்ற 0208.2022 செவ்வாய்க்கிழமை முதல் 04.08.2022 வியாழக்கிழமை வரை 3 நாட்களுக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு. இவ்விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.07.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:'

தருமபுரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வரும் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு, தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு பெற்ற ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கலில் இந்த ஆண்டு ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வருகின்ற 0208.2022 முதல் 04.08.2022 வரை 3 நாட்களுக்கு சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பிணர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலரிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

தருமபுரி மாவட்டம், ஓகேனக்கலில் இந்த ஆண்டு வருகின்ற 0208.2022 முதல் 04.08.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள ஆடிப்பெருக்கு விழா-2022-ல் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும். இவ்விழாவினை முன்னிட்டு இவ்விழா நடைபெறும் 3 நாட்களுக்கும் சுற்றுலா துறை, சேலம் மண்டல கலைபண்பாட்டுத்துறை, தென்னக கலை பண்பாட்டு மையம், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு வகையான வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு பெற்ற ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக நடத்திடும் பொருட்டு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளையும். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அணைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த துறை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ளவதோடு. இவ்விழா சிறப்புற நடைபெற ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை அந்தந்த துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு இவ்விழா சிறப்புற அணைத்து துறை லுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரசு / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.பி.பாடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருஅண்ணாமலை. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அமாலா, தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் முனைவர்.சாமுவேல் ராஜ்குமார், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர் திருமதிமாலினி மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) திரு ஜனார்த்தனன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies