Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவில், சாலையில் ஓடும் சாக்கடை சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.

ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, மூங்கில் மடுவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் இந்த ஊர் தெருக்களில் சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை, இதன் காரணமாக இந்த ஊரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர், சாலையிலேயே விடப்படுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த சாக்கடைக்குள்ளையே பொதுமக்களும் குழந்தைகளும் நடமாடி வருகின்றனர். இதனால் அதிகப்படியான கொசுக்கள் உருவாகியுள்ளது, மேலும் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்த சாக்கடை கழிவுகள் தெரு வழியாக ஓடி பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையை பயன்படுத்தும் அனைவரும் மூக்கை பிடித்தபடியே இந்த ஊரை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies