2020ஆம் ஆண்டு கோரோனா பேரிடர் காரணமாக 2 வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூர் முதல் காரைக்கால் வரை செல்லும் பயணிகள் ரயில் மீண்டும் இன்று பெங்களூர் பையப்பனஹள்ளி முதல் தருமபுரி வழியாக காரைக்கால் வரை தினசரி விரைவு ரயிலாக வண்டி எண் 16529 மற்றும் 16530 என மாற்றம் செய்து இன்று முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவையை மாரண்டஹள்ளி இரயில்வே கேங் எண் 6 ஊழியர்கள் மற்றும் இரயில் நிலைய ஊழியர்கள் மாரண்டஹள்ளி பொதுமக்கள் சார்பில் புதிய இரயிலுக்கு பூமாலையிட்டு பூஜை செய்து வரவேற்றனர்
இதில் மாரண்டஹள்ளி, சிக்கமாரண்டஹள்ளி, புதூர் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு ரயிலை வரவேற்றனர்.

