பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பென்னாகரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr.ஜெயச்சந்திரபாபு, நாகதாசம்பட்டி மருத்துவ அலுவலர் Dr.உமாமகேஸ்வரி , டிப்போ கிளை மேலாளர், சுகாதார ஆய்வாளர் மதியழகன் மற்றும் BHS, CHN,SHN,VHN சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

