இந்தியாவில் இதன் தாக்கம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது, அரசு பல்வேறு வகையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் கொரோனவை கட்டுப்படுத்த எடுத்து வருகிறது, தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவனையும் பூஸ்டர் தடுப்பூசி போன்றவையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
நமது மாவட்டத்தை பொறுத்த வரையில் நோய் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தொற்று (இதுவரை 283பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நேற்று வரை 36300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) அதிகரித்து காணப்பட்டது, இந்த 4வது அலையில் தமிழகம் தற்போது வேகமான பாதிப்பை கண்டுவருகிறது, தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் புதியதாக 12 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 70 பேர் தனிமைப்படுத்துதல், வீட்டு சிகிச்சை மற்றும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 198 ஆக்சிஜன் படுக்கைகளும், 199 சாதாரண படுக்கைகளும், 65 ICU படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது, மேலும் இதில் 198 ஆக்சிஜன் படுக்கைகளும், 198 சாதாரண படுக்கைகளும் 64 ICU படுக்கைகளும் காலியாக உள்ளது.
நோய் தடுப்பு கட்டுப்பாடுகளிலும் தடுப்பூசி கொள்வதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மட்டுமே நோய் தாக்கத்தை குறைக்க முடியும், என மருத்துவர்களும், ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.