Type Here to Get Search Results !

கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை என வரும் போலி செய்தியை நம்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பின் மூலம் எடுக்கப்படுவதாக தவறான தகவல்கள் கொண்ட வதந்தி செய்திகள் பகிரப்படுப்படுகின்றன. இது போன்ற வதந்தி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பின் மூலம் எடுக்கப்படுவதாகவும், சம்பளம் முறையே 15,000 மற்றும் 18,000 எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணிநேரம் பயிற்சி அளித்து பணிநியமன ஆணை வழங்கப்படும் எனவும் இதற்கான ஆணை ஜீன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறு Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு தலா 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம்) என தவறான செய்தி Whatsapp மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

புலனம், (Whatsapp) செயலி மூலம் பகிரப்பட்ட செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை எனவும், தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன எனவும், இது போன்ற வதந்தி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் இதன்வழி பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப.,அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies