தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (கிராமின்) இதுவரை வீடு கட்டும் பணி ஆரம்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு இத்திட்டம் குறித்து விளக்க கையேடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகளை இன்று (20.06.2022) வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (கிராமின்) இதுவரை வீடு கட்டும் பணி ஆரம்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு இத்திட்டம் குறித்து விளக்க கையேடு மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை தருமபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த திருமதி.ஜெயந்தி க/பெ.செல்வம் என்பவருக்கும், அதகபாடி ஊராட்சியைச் சேர்ந்த திருமதி.கலையரசி க/பெ இராஜா என்பவருக்கும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, திட்ட இயக்குநர் (பொ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) (பொறுப்பு) திரு.மோ.தமிழரசன், கண்காணிப்பாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள் (LD) சுகாதாரம்) திரு.ம.தண்டபாணி மற்றும் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.க.தனபால் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)


