கவியருவி பேராசிரியர் அப்துல்காதர், தமிழியக்கம் பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்ட நூலை உயர்திரு லோ.சக்திவேல், இந்திய ஆட்சிப்பணி அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் திரு.வ.செ.குணசேகரன், வரவேற்புரை வழங்கினார், இவ்விழாவுக்கு மானமிகு பெரு.முல்லையரசு அவர்கள் தலைமை தாங்கினார்.
உலகத்தமிழ்க்கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.செ.சி.இளந்திரையன் மற்றும் திரு ஆ.பழனிசாமி, திரு .இராமகிருட்டிணன் ஆசிரியர், திரு.மலர்வண்ணன், திரு அதியமான், திரு.புலவர் இராமசாமி, திரு.சு.பி.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் அரிமா அரங்க முருகேசன் ஏற்புரை வழங்கினார்.
மேலும் விழாவில் தமிழிசைப் பாடலை இசைப்பள்ளி ஆசிரியர் கவிபாரதி அவர்கள் பாடினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். விழா நிறைவில் திருமதி.உமாதேவி முருகேசன், ஆசிரியை அவர்கள் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை தமிழ்ப்படைப்பாளர் பேரவை, தருமபுரி மாவட்ட தமிழியக்கம், சகாப்தம் பதிப்பகம் ஆகியவை செய்திருந்தது.

