தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இணைய வழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் போளையம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமையில் நடத்தப்பட்டது.
ஊராட்சி தலைவர் கலைமணி மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். கம்பைநல்லூர்காவல் அலுவலகம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர்கள் லஷ்மி, இராஜகனபதி, இளைஞர் மன்ற துணைத்தலைவர் வீரசோழன் ஆகியோர் கலந்து கொண்டு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேலான இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போளையம்பள்ளி அயோத்தி தாசப்பண்டிதர் இளைஞர்மன்ற நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.

