தருமபுரி மாவட்ட வீர, தீர செயல்களில் ஈடுபட்டுள்ள மகளிர் வீர, தீர செயல்கள் செய்த மகளிருக்கான கல்பனா சாவ்லா விருது-2022-க்கு விண்ணப்பிக்கலாம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு வீர, தீர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதினை நிருவியுள்ளது. இவ்விருது வீர, தீர செயல்கள்; புரிந்த தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மகளிர்க்கு சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
எனவே தருமபுரி மாவட்ட வீர, தீர செயல்களில் ஈடுபட்டுள்ள மகளிர் விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அதன் நகலினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், அப்பாவு நகர், தருமபுரி அவர்களிடத்தில் 25.06.2022க்குள் கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

