தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டி அள்ளி ஊராட்சியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், நேர்த்தி கடன் செலுத்தவும் வந்து செல்கின்றனர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை 15வது நிதிக்குழு மானியம் 2020-21 மூலம் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் பேர்வெல்,1500 லிட்டர் தரை தள நீர் தேக்க தொட்டி, மின் மோட்டார் மற்றும் பைப் லைன் ஆகிய பணிகள் முடிந்தது. இதையடுத்து நீர் தேக்க தொட்டியை பி.செட்டி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் அருள்பாண்டி, மந்திரி கவுண்டர் ராமன், கோயில் பூசாரிகள் முனியப்பன், சஞ்சீவன் மற்றும் மாதப்பன்,அர்ஜுனன் , கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpeg)