Type Here to Get Search Results !

மின்சாரம் தாக்கி இறந்த காட்டு யானைக்கு 11-ஆம் நாள் காரியம் செய்த ஊர் மக்கள்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் நுழைந்த 40 வயது மதிக்கத்தக்க மக்னா எனும் காட்டு யானை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

இந்த  விபத்து கிராம பொது  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,  இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று பதினோராவது நாள் காரியம் செய்தனர்.

இறந்த யானை புதைக்கப்பட்ட குழியின் மீது பூக்கள்  அலங்கரிக்கப்பட்டு,  யானையின் விருப்பமான உணவாகிய வாழை, கரும்பு உள்ளிட்டவர்களை படையலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.இது காண்போரை  நெகிழ்ச்சி அடைய செய்தது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies