தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே செங்கன் பசுவந்தலாவ் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நரசிம்மன் (வயது 40) என்பவர் சக நண்பர்களுடன் நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார், அப்போது செங்கன் பசவன் தலாவ் அருகே முத்து என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு பன்றி, எலி, பாம்பு உள்ளிட்டவை களிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.
முயல் வேட்டையாட சென்ற நரசிம்மன் எதிர்பாரத விதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், சம்பவ இடத்திற்கு விரைந்த மாரண்டஅள்ளி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விவசாயி முத்துவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர், கடந்த சில தினங்களுக்கு முன் மின்வேலியில் சிக்கி யானை இறந்த சோகம் மறைவதற்குள். மீண்டும் மின் வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.