பென்னாகரம் முள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் முனிராபேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் ஜெகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் பிறகு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோசின் கான், பவுனேசன்,முன்னாள் கவுன்சிலர் H.A.பாபுலால் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.