நேற்று முன்தினம் மாலை பால் கறந்து தேவர்ஊத்துப்பள்ளம் சொசைட்டியில் ஊற்றி விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் மகன் பெயிண்டர் ராஜேஷ் (29) என்பவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த சரவணனின் மகளை வாயை மூடி பலவந்தமாக இழுத்து பாலியல் தொல்லை கொடுத்து அவரது வாய் உதடு மற்றும் பல இடங்களில் கடித்துள்ளார். இதனால் ரத்தம் வழிந்து வலியால் உமா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதை பார்த்த ராஜேஷ் உமாவிடம் ‘‘இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் நல்லம்பள்ளி போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், இது குறித்த தகவலை அறிந்த உமாவின் உறவினர்கள் ராஜேஷை தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராஜேஷும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்போது நுழைவுவாயில் அருகே வந்தபோது அங்கு இருந்த தனியார் வங்கியில் லோன் கலெக்சன் பிரிவில் வேலை செய்யும் உமாவின் சகோதரர் சென்னன் (23) ராஜேஷிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சென்னன் அருகே இருந்த இரும்பு ராடால் ராஜேஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவலறிந்து வந்த தருமபுரி டவுன் போலீசார் ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சென்னனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர், இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் உமாவிற்கு பாலியல் துன்புறுத்தல், கொடுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் நேற்று அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக