மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பென்னாகரம் பேரூராட்சி 16-வது வார்டு பெரியார் நகர் பகுதியில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜீ, நகர செயலாளர் எழிலரசு, கைலாசம், வெள்ளிங்கிரி, வ்தனபால், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல பென்னாகரம் பேரூராட்சி 18-வது வார்டு கோடியூர் பகுதியில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.மாதன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜீ , நகர செயலாளர் எழிலரசு, கைலாசம், வெள்ளிங்கிரி, தனபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நகர செயலாளர் ராகுல்ஜி மற்றும் நகர பொருளாளர் யுகபாரதி கிளை செயலாளர்கள் அருண்குமார், எல்லப்பன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.