அந்தப் பேரணியில், சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு ஊர்ப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரை மாற்ற கோரி கோஷம் எழுப்பினர்.
இந்த பேரணியில், லஞ்சம் ஒழிப்போம் ! லஞ்சம் கொடுப்பதும் லஞ்சம் வாங்குவதும் குற்றம். அதை மீறி லஞ்சம் வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
"லஞ்சத்தை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு சபதம் ஏற்போம்" போன்ற பதாகைகளுடன் இளைஞர்கள் வீதி வீதியாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர்.
மேலும் ஒழிப்போம் ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம் !!, வாங்காதே வாங்காதே ! லஞ்சம் வாங்காதே !, பத்தலயா, பத்தலயா சம்பளம் உனக்கு பத்தலயா ? கேட்காதே கேட்காதே !! சார் கேட்கிறார்னு கேட்காதே !! எடுக்காதே எடுக்காதே ! பிச்சை எடுக்காதே !!
போன்ற கோஷங்களை எழுப்பி கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக அப்பகுதி இளைஞர்கள் போராட்டம் செய்தனர்.. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

