கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காவிரிக் கரையோரங்களில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் திடீரென விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து நேற்று நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக வந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் குளிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் நீரின் வரத்து அதிகரித்து வினாடிக்கு 45ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்தால் ஐந்தருவி மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் மூழ்கடித்த படி ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவோ ஆற்றை கடக்கவோ, பரிசல் இயக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவு மூன்றாவது நாளாக தொடர்கிறது.

