தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை 4 ரோடு பகுதியில் சாலை நடுவே இருக்கும் உயர்மின் மின்கம்பத்தால் அடிக்கடிவிபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
பாலக்கோட்டில் பிரதான சாலையான புறவழிச்சாலையில் இருந்து ஓசூர் பெங்களூர் கிருஷ்ணகிரி மற்றும் பெரியாம்பட்டி நகர் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக நான்கு ரோடு சாலை உள்ளது.
இந்த சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, உயிர் பலி ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலை நடுவே இருக்கும் மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.