தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சங்க கொடியேற்று விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு கிளை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார், துணைத் தலைவர் வடிவேலு, செயலாளர் சண்முகம், பொருளார் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக தமிழக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மாநில தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, சங்க கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
கட்டுமான தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார், இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர், அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.