இப்போது பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் என அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது, பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் சூர்ய து தனபால் பேரூராட்சி உறுப்பினரும் முன்னாள் நகர செயலாளருமான முல்லைரவி உள்பட பலர் கலந்துகொண்டனர் .