கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்திய ஊரக விளையாட்டு வாரிய தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
10 வயது மாணவ பிரிவில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை செந்தில்
சிபிஎஸ்சி பள்ளியில்
படிக்கும் தன்சிகா என்ற மாணவி முதலிடம் பெற்றார். இதே பள்ளியின் ரமணன் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
14 வயது பிரிவில் நடந்த போட்டியில் ஈஷா யோகா பள்ளி மாணவி ரித்திகா முதலிடம் பெற்று பாராட்டி சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் சுற்று விதிகளின்படி நடந்த இப்போட்டியில் வென்று மாவட்டத்துக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை தர்மபுரி மாவட்ட வில் வித்தை சங்கத் தலைவர் சுரேஷ்குமார், பயிற்சியாளர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.