தருமபுரி மாவட்டம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 23.03.2022 அன்று நடைபெற்ற விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்ற விளையாட்டு பிரிவு மாணவியர்கள் மாநில அளவிலான தடகளப்போட்டி, வாலிபால் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் வருகின்ற 06.04.2022 அன்று முதல் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு, அப்போட்டிகளில் பங்கேற்பதற்காக தருமபுரி மாவட்டத்திலிருந்து தேர்வு பெற்ற விளையாட்டு பிரிவு மாணவியர்களில் வறுமையில் உள்ள 10 மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தேவையான காலணிகளை வழங்கி, இப்போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி. தே. சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.