Type Here to Get Search Results !

வெங்கடசமுத்திரம் தொடக்க வேளாண்மை சங்கத்தில் துருப்பிடித்த நிற்கும் வேளாண் இயந்திரங்கள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேண்டிய டிராக்டர், பவர்டிரில்லர்  முதலான உழவு உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் தலைவர் மற்றும் செயலாளர் தங்கள் தேவைக்கும் மற்றும் தங்களின் உறவினர்களின் தேவைக்கும் பயன்படுத்தி விட்டு அனைத்தும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. 

தற்போது வாடகைக்கு உபகரணங்களை கேட்டால் இவர்களாகவே வாடகைக்கு வண்டிகளை வழங்குவதில்லை எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது அதனால் நிறுத்தி விட்டோம் என்று கூறுகின்றனர் இதனால் அரசு வழங்கிய மக்களின் வரிப்பணம் சுமார் 20,00,000/- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் துருப்பிடித்து அழியும் நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies