பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு போதிய பராமரிப்பின்றி பழுதுதடைந்து உள்ளது. இதனால் கழிவறைக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் கழிவறை அசுத்தமாக காணப்படுகிறது, கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தண்ணீர் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் வரை சிறுநீரை அடக்கி வைத்து இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர், இதனால் மாணவிகளுக்கு மன உளச்சல், கல்லீரல் கோளாறு, சிறுநீர் பைகளில் கல் உண்டாகுதல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புக்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தண்ணீரை விலைக்கு வாங்கி நாளொன்றுக்கு ஒரு பக்கெட் தண்ணீரை மட்டுமே வைத்து மாணவ மாணவிகள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் பெற்றோர்கள் சார்பில் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவறைக்கு தேவையான தண்ணீரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.