தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வேடகட்டுமடுவு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியை அகற்ற வட்டாச்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் வீதியின் சாலையில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் தொட்டியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது எனவே அதை அகற்ற வேண்டுமென புகாரில் உள்ளதாக கோட்டப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் தொட்டியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதை தடுக்க கிராம மக்கள் முயன்றதாகவும் இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கிராமத்தில் மூன்று நபர்களை தாக்கியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை- அரூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி பெனாசிர்பாத்திமா பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரமாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.gif)

