Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கதிரியப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்!


தருமபுரி – செப்டம்பர் 24:
 


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி கூக்குடமரதஹள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கதிரியப்பன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமல்வாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலில் அஷ்டபந்தன விழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய விக்ரஹ கரிகோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து அக்னி ஆராதனம் செய்யப்பட்டு கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது. பின்னர் நூதன விக்கிரஹ பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், திருமஞ்சனம், அபிஷேகம், யாகசாலை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை யாகசாலையில் கும்பத்திற்காக பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து பட்டாச்சார்யர்கள் யாகசாலையில் இருந்து புனித கும்பங்களை தங்களது தலை மீது சுமந்து சென்று கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.


அப்போது கோயிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கதிரியப்பன் சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


விழாவையொட்டி கோயில் வளாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா, கோயில் பங்காளிகள், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies