பாப்பாரப்பட்டியில் திருச்சி தோட்டக்கலை மாணவிகள் நடத்திய கண்காட்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

பாப்பாரப்பட்டியில் திருச்சி தோட்டக்கலை மாணவிகள் நடத்திய கண்காட்சி.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக  தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கண்காட்சி நடத்தினர்.இக்கண்காட்சியில்,அடர் தீவனம் முறை, பசுந்தீவனம்,குழித்தட்டு நாற்றாங்கால், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி,சாமை (தர அடிப்படையில்),தாது உப்பு கலவை ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்  கேட்ட சந்தேகங்களுக்கு  தோட்டக்கலை மாணவிகள் விரிவாக  விளக்கம் அளித்தனர், இப்பயிற்சியில்,30 க்கும்   மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->