எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஏப்ரல், 2022

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்.

பென்னாகரம் புதிய   பேருந்து நிலையத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் நோக்கம்   மத்திய அரசினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சிலிண்டர் எரிவாய்வு விலை உயர்வை கண்டித்தும் வெளிப்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்க்கு  மாலையிட்டு தங்களின் எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன்  அவர்கள் தலைமை  ஏற்று நடத்தினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் எழிலரசு, ஜீவானந்தம், சிவா, சபரிராஜன், என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினை சார்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad