தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் ஸ்ரீ மல்லிகார்ஜுன ஈஸ்வரர் திருக்கோவில் 12- ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி நல்லம்பள்ளி #மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது. நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
மஹாசிவராத்திரி கோவிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சாமி மற்றும் நந்திக்கு பால், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம், வில்வம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்