தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தின்னபெல்லூர், காமராஜ் பேட்டை மாராச்சிக்கல் மலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகாசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.
முதல்நாளில் மகா நந்தி திரு உருவ கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வு மகா சிவன் சக்தி திரு உருவ சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மூன்றாம் நாள் நிகழ்வில் 108 அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.