Type Here to Get Search Results !

அரூரில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்.

 அரூர்

தருமபுரி


அரூரில் CIUT, LPF, AITUC, HMS, AICCTU தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர், சிபிஐ, சிபிஎம், கம்யூனிஸ்டுகள், விசிக கட்சிகள் மறியல் போராட்டம் 34பெண்கள் உட்பட 180 பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் அரூரில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து CITU, LPF, அமைப்புசாரா தொழிலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, கம்யூனிஸ்ட் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தப் பெயரிலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆகாது, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு, மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறு

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு7.500/நிவாரணம் வழங்கு என்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈடுபட்டவர்களில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களை அரூர் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர் இதில் 34 பெண்கள் உட்பட 180 பேர் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies