Type Here to Get Search Results !

பாலக்கோடு கூட்டுறவு சரக்கரை ஆலைக்குள் கரும்பு விவசாயிகள் திடீரென போராட்டம்.

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திர கோளாறால் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரவைக்கு பதிவு செய்துள்ளார்கள். 

இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட கரும்பு அரவை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது இரண்டாவது முறையாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அரவை நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் கரும்பு ஏற்றி வந்த லாரிகள், மாட்டு வண்டிகள் கடந்த 3 நாட்களாக அரவையின்றி உள்ளே நின்று கிடைப்பதால் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கரும்பு அரவை எப்போது துவங்கும் என்றும் எத்தனை நாளைக்கு காத்திருப்பது என ஆவேசம் அடைந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர், இதுபற்றி ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தானியங்கி இயந்திரங்கள் தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய பெங்களுரிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர், இன்று மாலைக்குள் கோளாறு சரி செய்யப்பட்டு அரவை பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து கரும்பு விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர், இதனால் சுமார் ஒரு மணி நேரம் சர்க்கரை ஆலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies